கமலஹாசனும் மேடை நிகழ்ச்சியும்

Saturday, December 11, 20103comments

நாட்டுக்கு இது இப்ப மிகவும் முக்கியமா என்று நினைக்காதவர்கள் மட்டும் தொடர்ந்து படிக்கவும்


பொதுவாக கல்வி சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் சினிமாப்பாடலுக்கு நடனமாடுவதை எதிர்போர் சங்கத்தினைச்சேர்ந்தவன் என்றபோதிலும் “கல்யாணந்தான் கட்டிக்கிட்டு …..” , “உன்னோட புருசனாக..” போன்ற வாழ்வியலுக்கு வழிகாட்டும் தத்துவப்பாடல்கள் அல்லாது ஜனரஞ்கத்தையும் சுவாரசியத்தையும் வரவழைக்கக்கூடிய தன்னம்பிக்கைப்பாடல்கள் மற்றும் கர்நாடக சங்கீதப்பாடல்களுக்கு ஆபாசமில்லாது ஆடுவதில் தவறில்லை என்பது அடியேனின் கருத்து.

இப்போது நான் கூறவரும் விடயம் என்னவென்றால் “ சலங்கை ஓலி” திரைப்படத்தில் வரும் “ஓம் நமசிவாய” எனும்பாடல். இப்பாடலுக்கு சைலஜா நடனமாடி இருந்ததுடன் கமலும் ஒருபத்திரிகையாளராக வந்துபோவார்.


இப்பாடலில் பஞ்ச பூதங்கள் என்பவற்றுக்கு நிலம் நீர் தீ காற்று, ஆகாயம் என பொருள் கொள்ளாமல் 5 பேய்கள் என சைலஜா அபிநயித்திருப்பார். எனினும் கமல் அது தவறு என பத்திரிகையில் எழுதி அது தொடர்பாக விளக்கம் கேட்கவரும் சைலஜாவிற்கும் அவரது காதலருக்கும் பல்வேறு சம்பிரதாயஙகளில் ஆடிக்காட்டி அசத்துவார்…….


இப்ப நான் கமலஹாசன் ஆக வெளிக்கிடல்ல………….


ஊரில 3 நிகழ்சில பார்த்திருக்கன் தொலைக்காட்சில 2 தடவ பார்த்திருக்கன் ஆடிற ஆக்கள் அச்சு பிசகாம ஆடிறாங்க ஆனா பஞ்ச பூதத்திற்கு 5 பேய காட்டித்தான் ஆடுறாங்க யாராவது அத திருத்த சொல்லமாட்டங்களா?




என்னதான் இருந்தாலும் இதபோல வருமா?


Share this article :

+ comments + 3 comments

December 12, 2010 at 6:02 AM

mm master new achivement

December 13, 2010 at 9:41 AM

Thanks Vithu...

December 15, 2010 at 3:44 AM

suren welcome blogsite,

Post a Comment
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Suranuthan - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Premium Blogger Template