நிந்தவூர் கடற்கன்னியும் youtubeஉம்

Sunday, October 25, 20090 comments

கடந்த வாரத்தில் காரைதீவு பிரதேசத்தில் எல்லோர் வாயிலும் அடிபட்ட விடயம் எதுவென்றால் நிநதவூர் பிரதேசத்தில் பிரதேசத்தில் கடற்கன்னி ஒன்றின் (ஒருத்தியின்?) சடலம் கரையொதுங்கியதாகவும், அதனை அப்பிரதேச மக்கள் உடனேயே தமது மத நம்பிக்கை அடிப்படையில் புதைத்து விட்டதாவும் கூறப்பட்டு அது சம்பந்தமான ஒரு வீடியோவும் தொலைபேசிளில் கலரிடமும உலாவியது. அந்த வீடியோவில் ஒரு மனிதரின் முகத்தை ஒத்ததும் பெண்ணின்உடலமைப்பபை உடையது கீழே மீன் போற்றதுமான தோற்றம் காட்டப்பட்டதுடன் அரபு மொழியில் ஏதோ ஓதும் சத்தமும் கேட்கக்ககூடிதாக இருந்தது. பார்க்கும் எவருக்கும் அது கடற்கன்னிதான் என்ற நம்பக்கூடியவாறு அந்த வீடியோ இருந்தது. கடற்கன்னியை நம்பாத சிலர் அது வேற்றுக்கிரக ஜந்தாக இருக்கலாம் எனக்கருதினர்.
எனினும் இணைத்தில் தேடிப்பார்த்தபோது இதே போன்ற ஒரு வீடியோ ஜுலை மாதம் 22 ஆண்டு 2007 ஆண்டு youtube இல் பதிவேற்றப்பட்டிருந்தது.





மேலும் இணையத்தின் தேடியபோது அது திருக்கை இனத்தை சேர்ந்த கிற்றார் மீன் (guitar fish) என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் உடலமைப்பு கிற்றார் வாத்தியத்தைப் போல இருப்பதால் இப்பெயர் வந்திருக்கலாம் .உண்மையில் எமக்கு கண்கள் போலத் தெரிபவை கண்கள் அல்ல அவைகள் சுவாச உறுப்புக்களாக இருக்கலாம்













இவற்றின்
விஞ்ஞான வகைப்படுத்தல் இவ்வாறு அமையும்.Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Chondrichthyes
Subclass: Elasmobranchii
Order: Rajiformes
Family: Rhinobatidae
இணையத்தில் Guitar fish எனத் தேடி அது சம்பந்தமாக மேலதிகமான தகவல்களைப்பெறலாம்.
Share this article :
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Suranuthan - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Premium Blogger Template